சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் கல்லூரி மாணவியர்களை நேரில் சந்தித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்:

  

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P..சரவணன்IPS, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம்  குற்றங்களிலிருந்து மாணவ, மாணவியர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக  திருநெல்வேலி மாவட்டம் தூய.சவேரியார் கல்லூரி  மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட  பெண்கள் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன், அவர்கள் தலைமையில்   திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், காவலர் திரு.ரஞ்சித் ஆகியோர்  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது கல்லூரி மாணவ

மாணவிகளுக்கு திருநெல்வேலி  மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , அவர்கள் கல்லூரி  மாணவிகளுக்கு பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்,  பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவலன் SOS செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினா

பின் சைபர்கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம் அவர்கள், காவலர் திரு.ரஞ்சித் ஆகியோர்  பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், முகாந்திரம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி,மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருள்கள் விழுந்துள்ளதாக வரும் எந்த ஒரு அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள், லிங்க்குகளுக்கு பதில் வைக்க வேண்டாம் என்றும், பண மோசடி சம்பந்தமான குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930, மோசடி புகார்களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரி (http://cybercrime.gov.in) வழங்கியும் பெருகி வரும் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு வழங்கினர்

.தலைமைநிருபர்.S.சண்முகநாதன்


Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.