வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட வழக்கில் இருவர் கைது. 9½ பவுன் தங்க நகை மற்றும் 42 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்த தேவர்குளம் காவல் நிலைய காவல் துறையினருக்கு பாராட்டு.
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கூவாச்சிபட்டியை சேர்ந்த கோமதிதாய்(44), என்பவரின் வீட்டிற்குள் 25.3.2022-ம் தேதி மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோமதிதாய் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் திருட்டில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய தேவர்குளம் உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான காவல்குழுவினர் தீவிரமாக விசாரணை செய்து திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான மூவிருந்தாளியை சேர்ந்த விஜயராஜ்(30), அ.மருதப்பபுரத்தை சேர்ந்த வேல்முருகன்(23), இருவரையும் கைது செய்து 9½ பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 42 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
மேற்படி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்டு திறம்பட செயல்பட்ட தேவர்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், தலைமை காவலர் திரு.வேல்பாண்டி, முதல்நிலை காவலர்கள் திரு.தங்கதுரை, திரு. மணிமொழியன், திரு.மனோகரன், மற்றும் காவலர்கள் திரு.கற்பூதபாண்டி, திரு.மருதுபாண்டி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.


.jpeg)
Comments
Post a Comment