திருநெல்வேமாவட்டம் ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 3, ஏக்கர் 10, சென்ட் நிலங்களை மீட்க திறன்படசெயலாற்றிய நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினருக்கு SP.P.சரவணன் IPS பாராட்டு:
08-04-22திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சாரதா என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் இடம் லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இதேபோல் மானூர் அருகே உள்ள தென்கலத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான 70 சென்ட் இடம் தென்கலம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேற்படி இருவரும் நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம் மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், தலைமைக் காவலர் திரு.நாகராஜன், முதல் நிலை காவலர் திரு.சண்முகம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு சாரதாவிற்கு சொந்தமான ரூபாய் 22 லட்சம் மதிப்பிலான நிலத்தையும், செல்வமணிக்கு சொந்தமான 14 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் மீட்டு அதற்கான ஆவணத்தை *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன் IPS அவர்கள் நில உரிமையாளர்களிடம் 08.04.2022 . மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
*இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள நிலத்தினை மீட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS, அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்
.jpeg)

Comments
Post a Comment