Posts

Showing posts from February, 2022

திருப்பூர் பள்ளி மாணவர்களுக்கு இடையே பிரச்சனை - போலீஸ் பாதுகாப்பு

Image
திருப்பூர் இடுவம்பாளையம் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது, எனவே மாணவர்களின் பாதுகாப்பிற்காக தினமும் பள்ளியை  விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது வரிசையாக பாதுகாப்புடன் செல்வதற்கு, வீரபாண்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் சையது இக்பால் மற்றும் காவல் குழுவினர்கள்  கவியரசன் பிரபாகரன் சத்யராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது திருப்பூர் நிருபர் தண்டபாணி 

துபாயில் மிகப் பிரமாண்டமான 'எதிர்கால அருங்காட்சியகம்' திறக்கப்பட்டுள்ளது.

Image
துபாயில் மிகப் பிரமாண்டமான 'எதிர்கால அருங்காட்சியகம்' திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், 'புர்ஜ் கலிபா' என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது. இதையடுத்து, உலகிலேயே மிக அழகான கட்டடம் என்ற சிறப்பை எதிர்கால அருங்காட்சியகம் பெற்றுள்ளது. ஷான் கில்லா என்ற கட்டடக் கலை வல்லுனர் வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீம் அல் மக்தும் திறந்து வைத்தார். திறப்பு விழாவின்போது வாண வேடிக்கை, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. லேசர் ஒளிக்காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தன. 3.23 லட்சம் சதுர அடி பரப்பில், 252 அடி உயர கோள வடிவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை கட்டி முடிக்க, ஒன்பது ஆண்டுகள் ஆகின.இந்த கட்டடம், 'ரோபோ' க்கள் வாயிலாக, உருக்கில் செய்த 1,024 கலை வடிவங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எதிர்கால வாழ்க்கை குறித்த புதிய சிந்தனைகளுடன் எண்ணற்ற புதுமைப் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன. ஆண்டுக்கு, 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தியில் இந்த அருங்காட்சியகம் இயங்க உள